தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2020, 4:30 AM IST

ETV Bharat / state

உசிலம்பட்டியில் படையெடுத்தவை நாட்டு வெட்டுக்கிளிகளே - ஆர்.பி.உதயகுமார்!

மதுரை: உசிலம்பட்டியில் படையெடுத்தவை நாட்டு வெட்டுக்கிள் மட்டுமே என்றும், இதனால் விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Country locusts invaded Usilampatti - RP Udayakumar!
Country locusts invaded Usilampatti - RP Udayakumar!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நில அளவையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஆப்பிரிக்க நாடுகளில் உருவாகும் பாலைவன வெட்டுக்கிளிகளாக இருக்கும் என உசிலம்பட்டி விவசாயிகள் அச்சமடைந்தனர். ஆனால் அவை நாட்டு வெட்டுக்கிளிகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், துறை அமைச்சர் என்ற முறையிலும் மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் முன் வைத்துள்ளேன்.

தூத்துக்குடியில் காவலர் சுப்ரமணியன் கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது. எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் போல, மக்களை காக்கும் பணியில் இரவு பகலாக உயிரை பணயம் வைத்து காவலர்கள் பணியாற்றுகிறார்கள். காவலர் சுப்ரமணியனின் பணி அளப்பரியது.

உசிலம்பட்டியில் படையெடுத்தவை நாட்டு வெட்டுக்கிளிகளே - ஆர்.பி.உதயகுமார்

பொதுமக்கள் அத்தியாவசியமான தேவைக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். இ-பாஸ் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள எளிமையான முறையால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர் என்றார்.

இதையும் படிங்க:கடலூரில் இன்று 239 பேருக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details