கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை 6மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. முன்னதாக இதற்கான ஆயத்தப்பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டனர். பொதுமக்களை அவரவர் வீடுகளுக்குச் செல்லுமாறும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்த்தும், ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு நிற்குமாறும் அறிவுறுத்தினர்.
ஊரடங்கு உத்தரவு: பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய மாநகராட்சி ஊழியர்கள் - மதுரை செய்திகள்
மதுரை: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையொட்டி பொதுமக்கள் அனைவரையும் வீடுகளுக்குச் செல்லுமாறும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் கடைகளில் கூட்ட நெரிசல்களைத் தவிர்க்குமாறும் மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.
ஊரடங்கு உத்தரவு: பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய மாநகராட்சி ஊழியர்கள்!
ஊரடங்கு உத்தரவினால் மதுபானக் கடைகள் முழுவதும் மார்ச் 31ஆம் தேதி வரையில் மூடப்படவுள்ளதால், திருப்பரங்குன்றம், திருநகரைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் மதுபானக்கடைகளிலும் மக்கள் கூட்டமாக இருந்தனர். அவர்களையும் இடைவெளிவிட்டு நிற்குமாறு அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க:கரோனா: ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 3 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல்