தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்! - Madurai Corporation Contract Workers

மதுரை மாநகராட்சி சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் பணி நிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

corporation-contract-workers-protest-in-madurai
corporation-contract-workers-protest-in-madurai

By

Published : Oct 21, 2020, 7:39 PM IST

மதுரை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அனைத்து தினக்கூலி தொழிலாளர்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட தொழிலாளருக்கு ரூ. 2 லட்சம் என நிவாரணம் வழங்க வேண்டும்.

மதுரை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

7ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி 26 மாத நிலுவை தொகையை வழங்கிட வேண்டும், தினக்கூலி தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:26 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details