கோவின் (Cowin) இணையதளத்தில் தடுப்பூசி தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தில் இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 9 மாநில மொழிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ்மொழி இடம்பெறாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழ் மொழி பதிவேற்றம் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்ததாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் கோவின் இணையதளத்தில் இதுவரை தமிழ்மொழி இடம்பெறாத நிலை தொடர்கிறது.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் நிலம் மீட்பு - அமைச்சரை பாராட்டிய இந்து முன்னணி!