துபாயிலிருந்து கோரெண்டல் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 143 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதைத் தொடர்ந்து பயணிகளுக்கு கரோனா அறிகுறிகள் குறித்த பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து மதுரைக்கு வரும் விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை - துபாயிலிருந்து மதுரைக்கு வரும் விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை
மதுரை: துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள இரு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
![துபாயிலிருந்து மதுரைக்கு வரும் விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை Corona test for passengers from Dubai to Madurai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6470037-thumbnail-3x2-ha.jpg)
Corona test for passengers from Dubai to Madurai
விமானப் பயணிகள்
மதுரை சின்ன உடப்பு பகுதியிலுள்ள அரசு கூட்டுறவு பயிற்சி கல்லூரி முகாமில் 120 படுக்கை வசதியும், ஆஸ்டின்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி முகாமில் 60 படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளை முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கு இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கரோனா அறிகுறிகள் இருக்கும் பயணிகள் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர்.
இதையும் படிங்க:'கரோனா வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை' - கோவை ஆட்சியர்