மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு குறித்தும், புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் சிலிண்டர் குறித்தும், வருவாய் துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 லிட்டர் திரவ ஆக்சிஜன் சிலிண்டரையம் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "மதுரை மாவட்டம் நிர்வாகம் சார்பாக மாவட்டம் முழுவதும் ஜூலை 4ஆம் தேதி முதல் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலம் காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனையானது நடைபெற்று வருகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பாக, மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுவதிலும் ஆக்சிஜன் சிலிண்டர் வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை அரசு ராசாசி மருத்துவமனையில் 462 சிலிண்டர் வசதியும், மதுரையில் உள்ள ஒவ்வொரு தாலுக்காகளிலும் 250 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 61 ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும் அமைப்பதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது.