மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தனிப்பிரிவில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூன்று நபர்கள் கரோனா அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரோடு சேர்ந்து சொற்பொழிவாற்றிய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள்தான்.
இவர்கள் மூன்று பேரிடமிருந்துதான் அவருக்கு கரோனா தொற்று வந்திருக்க முடியும் எனச் சுகாதாரத் துறை சந்தேகித்துவருகிறது. மதுரையின் புறநகர்ப் பகுதியில் தங்கியிருந்த இந்தத் தாய்லாந்து நாட்டுக்காரர்கள் முழு பரிசோதனைக்குள்படுத்தப்பட்டதில் மூவருக்கும் கரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.