மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம், மானாமதுரை, கமுதி, பரமக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு தனியார், அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் படிக்கட்டுகளிலும், பேருந்தின் உள்ளே கூட்ட நெருக்கடியில் நின்றும் பயணிக்கின்றனர்.
கரோனாவா... அப்பிடின்னா? - விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் பேருந்துகள் - கோவிட்
பேருந்துகளில் பயணிகள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் தகுந்த இடைவெளியின்றி பயணித்துவருவது தொற்று பரவலை அதிகப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
காற்றில் பறக்கவிடப்பட்ட தகுந்த இடைவெளி
ஆனால், மதுரையிலிருந்து திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, கமுதி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு, தனியார் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாக பொது மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் பயணிக்கின்றனர்.