தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரண அரிசி கடத்தல் - வைரல் வீடியோ - சமூக ஆர்வலர்கள் கண்டனம்

மதுரை: அண்ணா நகரில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான ரேஷன் கடையில் கரோனா நிவாரண அரிசி மூட்டை கடத்தப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

madurai
madurai

By

Published : May 14, 2020, 9:34 AM IST

மதுரை மாவட்டம் அண்ணா நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பட்டப்பகலிலேயே கரோனா நிவாரணத்திற்காக வந்த அரிசி மூட்டைகள் ஆம்னி கார் மூலம் கடத்தப்படுவதாக வெளியான ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் காட்டுத் தீபோல் பரவியது.

இச்சம்பவம் குறித்து மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை அமைப்பின் தலைவர் ஹக்கீம் வாட்ஸ் அப் மூலமாக தெரிவித்துள்ள கருத்தில், "ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல், மதுரையில் பல இடங்களில் நடைபெறுகிறது.

தற்போது, கரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், ஏழை எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த அரிசியை அடையாளம் தெரியாத நபர்கள் மனசாட்சியின்றி சட்டவிரோதமாக கடத்திச் செல்கிறார்கள். இதற்கு அரசு அலுவலர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். அரிசி மட்டுமின்றி சீனி, பருப்பு, எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருள்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தப்படுகின்றன.

ரேஷன் அரிசி கடத்தப்படும் காட்சி

இந்தக் கடத்தல் தடுக்கப்பட வேண்டும். இதற்கு துணையாக நின்ற அனைத்து நபர்கள் மீதும் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தமிழக அரசு ஆணை

ABOUT THE AUTHOR

...view details