தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரண நிதி ரூ.2000 - இன்று முதல் டோக்கன் விநியோகம் - latest news

தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2000 வழங்குவதற்கான டோக்கன், ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டது.

Breaking News

By

Published : May 10, 2021, 3:53 PM IST

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றவுடன் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண உதவித்தொகையாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல் தவணையாக ரூ. 2000 ரூபாய் இம்மாதமே வழங்கப்படும் என்றார். இதை பெறுவதற்கான டோக்கன் இன்று (மே 10) முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

மதுரை அவனியாபுரத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக ஒரு நாளைக்கு 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படுகின்றன. ஊழியர்கள் முகக்கவசம் அணிந்தும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும் டோக்கன் விநியோகித்து வருகின்றனர். டோக்கன் பெற்றவர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வருகின்ற 15ஆம் தேதி முதல் கரோனா நிவாரண உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

டோக்கன் பெற்றவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வருகின்ற 15ஆம் தேதி முதல் கரோனா நிவாரண உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் ஜூன் மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடு முழுவதும் ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details