தமிழ்நாட்டில் இன்று புதிதாக ஐந்தாயிரத்து 880 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் புதிதாக 109 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மதுரையில் புதிதாக 109 பேருக்கு கரோனா - கரோனா வைரஸ்
மதுரை : இன்று (ஆகஸ்ட் ஏழு) 109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது.

மதுரை மருத்துவமனை
இதன் மூலம், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 797ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்பதாயிரத்து 733 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தற்போது ஆயிரத்து 786 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 278 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.