தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் தப்பியோட்டம்! - மதுரையில் சிகிச்சைப் பெற்றுவந்த இளைஞர் தப்பி ஓட்டம்

மதுரை: சின்ன உடைப்பு பகுதியில் உள்ள கரோனா வைரஸ் சிறப்பு முகாமில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளைஞர் ஒருவர், அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சிகிச்சைப் பெற்றுவந்த இளைஞர் தப்பி ஓட்டம்
சிகிச்சைப் பெற்றுவந்த இளைஞர் தப்பி ஓட்டம்

By

Published : Mar 26, 2020, 5:24 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து மதுரை விமான நிலையம் வரும் பயணிகள், கரோனா வைரஸ் சிறப்பு முகாமில் தங்கவைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், துபாய், சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த 9 பேரை, சின்ன உடைப்பு பகுதியில் உள்ள கரோனா சிறப்பு முகாமில் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து, இங்கு தொடர் கண்காணிப்பில் இருந்த சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடி வலையதாரனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய்(22) என்ற இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சிகிச்சைப் பெற்றுவந்த இளைஞர் தப்பி ஓட்டம்

இது குறித்து, மதுரை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் முத்துவேல், அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து தப்பியோடிய இளைஞரை தற்போது அவனியாபுரம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊர்சுற்றியவர்களை 'கவனித்து' அனுப்பிய காவல்துறையினர்

ABOUT THE AUTHOR

...view details