தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடியிலிருந்து குதித்த கரோனா நோயாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு - மாடியிலிருந்து குதித்த கரோனா நோயாளி

மதுரை: கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 60 வயது முதியவர் மாடியிலிருந்து குதித்த தற்கொலை செய்துகொண்டார்.

மாடியிலிருந்து குதித்த கரோனா நோயாளி
மாடியிலிருந்து குதித்த கரோனா நோயாளி

By

Published : Jun 29, 2020, 10:50 AM IST

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு அண்மையில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதனால் அவரை உறவினர்கள் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. அதைடுத்து அவரை சமூக செயற்பாட்டாளர்கள் கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பின் அவர் தனியார் கல்லூரி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார்.

மாடியிலிருந்து குதித்த கரோனா நோயாளி

அங்கு அவர் மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர், நேற்று இரவு இரண்டாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

அதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் இராசாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க:கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் உயிரிழப்பு; டெல்லியில் சோகம்

ABOUT THE AUTHOR

...view details