மதுரை விமான நிலையத்தில் இன்று (ஏப்.30) காலை முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பகல் 12 மணி முதல் இரவு 10.40 மணி வரை விமான சேவைகள் இயக்கப்படும். அதற்கு முன்னதாக காலை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.