தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 காவல் துறை கைதிகளும், மதுரை மத்திய சிறையில் உள்ள நிலையில், அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதோடு, அவ்வழக்கு விசாரணைக் குழுவில் இருந்த ஆறு சிபிஐ அலுவலர்களுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைதான காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ இன்று (ஜூலை 28) அறிக்கை தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அறிக்கை தாக்கல் செய்வது தாமதம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை: 'ரமணா' பட பாணியில் நடந்த சோகம்!