தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தாக்கம்: மதுரையில் மேலும் இரு பகுதிகளுக்கு 'சீல்'

மதுரை: கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மதிச்சியம், மேலமடை ஆகிய பகுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

madurai
madurai

By

Published : Apr 15, 2020, 12:59 PM IST

மதுரையில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மதிச்சியம், மேலமடை பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் யாருக்கும் வெளியில் செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் வெளியாட்கள் அனுமதிக்கப்படமாட்டர்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரையில் இதுவரை 41 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் 120க்கும் அதிகமானோர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதிச்சியம், மேலமடை பகுதிகளுக்கு 'சீல்'

அதைத்தொடர்ந்து நேற்று மேலும் இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே மதுரையில் நரிமேடு, தபால் தந்தி நகர், திருமங்கலம், உசிலம்பட்டி, எழுமலை ஆகிய பகுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘2 முறை சோதனையில் இல்லை... 3ஆவது முறையில் கரோனா உறுதி’ - கீழமாத்தூருக்கு சீல்!

ABOUT THE AUTHOR

...view details