தமிழ்நாட்டில் இன்று (ஆக.11) ஒரே நாளில் 5,834 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649ஆக அதிகரித்துள்ளது.
மதுரையில் மேலும் 91 பேருக்கு கரோனா உறுதி - கரோனா உயிரிழப்பு
மதுரை: மாவட்டத்தில் இன்று மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,195ஆக உயர்ந்துள்ளது.
Corona guaranteed for 91 more in Madurai!
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 11 ஆயிரத்து 28 பேர் முழுவதுமாக குணமடைந்த நிலையில், தற்போது 870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததினால், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 297ஆக அதிகரித்துள்ளது.