தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச தொகுப்பு: மதுரை நியாய விலைக் கடைகளில் பணிகள் தீவிரம்

மதுரை: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி நியாய விலைக் கடைகளில் இலவச தொகுப்புகளை விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

works-at-madurai
works-at-madurai

By

Published : Mar 27, 2020, 7:29 PM IST

கரோனா வைரஸால் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதையடுத்து, தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000, அரிசி, பருப்பு உள்பட இலவச தொகுப்புகள் ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

மதுரை நியாய விலைக்கடைகளில் பணிகள் தீவிரம்
அதன்படி, இலவசத் தொகுப்புகளை மதுரை அவனியாபுரம் பகுதியிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகள், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அப்போது, கூட்டம் கூடுவதை தவிர்த்தல், டோக்கன் முறை விநியோகம், கிருமி நாசினி வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details