பாதிக்கப்பட்ட அர்ச்சகர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வெளிநாடு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தனது வெளிநாட்டுப் பயணத்தை மறைத்து தொடர்ந்து கோயிலில் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாகத் தான் அவரது மனைவி மற்றும் தாயாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது அவருடன் தொடர்பில் இருந்த அனைத்துக் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், பிற அர்ச்சகர்கள், அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.