தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை - துணை ஆணையர் - துணை ஆணையர் பாஸ்கரன் பேட்டி

மதுரை: மாநகருக்குள் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் கரோனா கண்டறிதல் சோதனை நடைபெறுகிறது என்று துணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

துணை ஆணையர் பாஸ்கரன்
துணை ஆணையர் பாஸ்கரன்

By

Published : Mar 27, 2020, 3:24 PM IST

மதுரை மாநகரின் அனைத்து பகுதிகளிலும் காவல் பணிபுரிந்துவரும் அனைத்து காவலர்களுக்கும் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவது குறித்து, மாநகர காவல் ஆணையர் தலைமை அலுவலக துணை ஆணையர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது:

மதுரை மாநகருக்குள் பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை தற்போது செய்யப்பட்டுவருகின்றது. மேலும், அரசு இராசாசி மருத்துவமனை சிறப்பு மருத்துவர் குழுவினர், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவலர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் இடத்திற்கே நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

துணை ஆணையர் பாஸ்கரன் பேட்டி

இதில், காய்ச்சல் சளி போன்ற ஆரம்ப கட்ட நோய்களுக்கு உடனடியாக மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது. மேலும் சில சிறப்பு கருவிகள் கொண்டு தொடக்க பரிசோதனையும் செய்யப்படுகிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மதுரை மாநகரைப் பொறுத்தவரை, 144 தடை உத்தரவு மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.

இத்தடையை மீறி வெளியே வருகின்ற நபர்கள் அறிவுறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றனர். இதனால், இப்பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவிட் 19: நிதி உதவி அளித்த ராணுவ வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details