கரோனா தொற்று இல்லா மதுரையை உருவாக்க 6 அம்ச திட்டம் - முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் - corona camp
கரோனா தொற்று இல்லாத முதல் மாவட்டமாக மதுரையை உருவாக்கிட 6 அம்ச திட்டங்களை மேற்கொள்ளுமாறு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
திருமங்கலம் தொகுதி புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியினை முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
"நகர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வையும், நோயின் தாக்கத்தையும் அதன் விபரீதங்களையும் எடுத்து வைக்க வேண்டும் நோய்த்தடுப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வை கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும்.
பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகப்படுத்துவதின் மூலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். அரசின் கோவிட்19 வழிகாட்டு நெறிப்படி தேவையான சிகிச்சையை விரைவாக அளித்தால் குணமடைவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும்
தேவையான இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாமை விரைவுபடுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் இடங்களில் மக்கள் அதிகமாக வருவதை தடுக்கும் வகையில் முறையான நடவடிக்கை மேற்கொண்டும், அதிக அளவில் தடுப்பூசிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று அனைத்து பகுதிகளில் பாரபட்சமின்றி வினியோகம் செய்ய வேண்டும்