தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 21) ஒரே நாளில் 4 ஆயிரத்து 965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உயரும் கரோனா பலி எண்ணிக்கை - பொதுமக்கள் அச்சம்! - பொதுமக்கள் அச்சம்
மதுரை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும், 158 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
![மதுரையில் உயரும் கரோனா பலி எண்ணிக்கை - பொதுமக்கள் அச்சம்! Corona death toll rises in Madurai - Public fears!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:25:24:1595339724-tn-mdu-05-corona-forecast-july21-script-7208110-21072020191441-2107f-1595339081-528.jpg)
Corona death toll rises in Madurai - Public fears!
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் இன்று (ஜூலை21) ஒரே நாளில், 158 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,517ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,070 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி ஏழு பேர் உயிரிழந்துள்ளதால், இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 167ஆக உயர்ந்துள்ளது.