கரோனா ஊரடங்கு காரணமாக கோயில் விழாக்கள் ரத்துசெய்யப்பட்ட நிலையில் அதனை வாழ்வாதாரமாக நம்பியுள்ள பல்வேறு கலைஞர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் போதிய தடுப்பு நடவடிக்கைகளோடு கிராமப்புற கோயில் விழாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
ஊரடங்கு: நிவாரணத் தொகை வழங்கக் கோரி நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு - Corona
மதுரை: கரோனா ஊரடங்கு கால நிவாரணத் தொகை வழங்கக் கோரி மரக்கால் ஆட்டக்கலைக் கலைஞர்கள் மரக்கால் ஆட்டம் நிகழ்த்தியவாறு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாட்டுப்புற கலைஞர்கள்
அப்படி அனுமதி அளிக்க முடியாத நிலையில் பாரபட்சமின்றி அனைத்து மரக்கால் ஆட்டக் கலைஞர்களுக்கும் தலா ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மரக்கால் ஆட்டம் ஆடியபடி வந்த கலைஞர்கள் ஆட்சியர் த. அன்பழகனைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.