மத்திய அரசின் உத்தரவின்படி உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் மே 28ஆம் தேதி டெல்லி விமான நிலையத்திலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளில் ராணுவ வீரர் மற்றும் இளைஞர் ஒருவர் கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டனர்.
டெல்லியிலிருந்து மதுரை வந்த ராணுவ வீரருக்கு கரோனா - corona confirm soldier
டெல்லியிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த ராணுவ வீரர் உள்பட இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
![டெல்லியிலிருந்து மதுரை வந்த ராணுவ வீரருக்கு கரோனா madurai-airport](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7394275-thumbnail-3x2-l.jpg)
madurai-airport
அதனால் இருவரையும் தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவில் இன்று
இருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர்கள் அரசு மருந்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மதுரையில் இரண்டு கைதிகளுக்கு கரோனா தொற்று