தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தை தாண்டுகிறது.
அந்த வகையில், மதுரை மாவட்டத்திலும் கரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் (ஜூலை 25) வரை கரோனா தொற்றால் 9,596 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஜூலை 26)புதிதாக 209 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 805ஆக அதிகரித்துள்ளது.