மதுரை புதூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்ட வண்ணம் இருந்தன. அதனை தடுப்பதற்காக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த குமார், ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், பாசிங்கப்புரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 21 பவுன் நகை மீட்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கமுதி ஆயுதப்படையில் பணியாற்றிவரும் காவலர் கார்த்திக் குமார் என்பவர் தான், வழிப்பறி சம்பவத்திற்கு வாகனம் கொடுத்து உதவி செய்ததாகவும், நகைப்பறிப்புக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறினர்.
இதையடுத்து காவலர் காத்திக்குமார் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேரையும் மாவட்ட நடுவர் நீதிமன்றம் நீதிபதி முத்துராமன் முன்னிலையில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.