பெட்ரோல், டீசல் விலையை போன்று, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசானது ஒரே மாதத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை இரண்டு முறை உயர்த்தியுள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வந்தது.
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ஈம சடங்கு செய்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்! - மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர், சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஈம சடங்கு செய்தும், இறுதி அஞ்சலி செலுத்தியும் விநோதமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் வினோத ஆர்ப்பாட்டம்
அதைத் தொடர்ந்து, மத்திய அரசை கண்டிக்கும் விதமாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கேஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து ஈம சங்கு செய்து, இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக சிலிண்டர்களை தூக்கி ஊர்வலமாக சென்றனர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிலிண்டர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக மேளதாளங்கள் முழங்க, சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வாடிப்பட்டி நகர் முழுவதும் சிலிண்டருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக ஊர்வலமாக கேஸ் சிலிண்டர்களை தூக்கி சென்று விநோதமான முறையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சிலிண்டர் விலை உயர்வு: விஜயகாந்த் கண்டனம்