தமிழ்நாடு

tamil nadu

சர்ச்சைக்குரிய பேச்சு - குஷ்பு மீது புகார் அளிக்க முடிவு

By

Published : Oct 14, 2020, 7:19 PM IST

மதுரை: மனவளர்ச்சி குன்றிய நபர்களை அவமானப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் நல உரிமை சங்க மாநில பொதுச் செயலாளர் ஜான்சிராணி கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய பேச்சு - குஷ்பு மீது புகார் அளிக்க முடிவு
சர்ச்சைக்குரிய பேச்சு - குஷ்பு மீது புகார் அளிக்க முடிவு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, காங்கிரஸ் கட்சியிலருந்து விலகி,பாஜக-வில் இணைந்த திரைக்கலைஞர் குஷ்பு சுந்தர், அக்டோபர் 13ஆம் தேதியன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சியை “மூளை வளர்ச்சி இல்லாத கட்சி” என பேசினார். இதுகுறித்து விரிவான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆனால், மாற்றுத்திறனாளிகள் விரோத, சட்டவிரோத, தண்டனைக்குரிய தனது கருத்திற்கு வருத்தமோ, மறுப்போ குஷ்பு இதுவரை தெரிவிக்கவில்லை.

தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்தியுள்ள அவருடைய இந்த கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும், சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்தாகும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 பிரிவு 92(a)ன்படி, உள்நோக்குடன் மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்திற்கு 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் உண்டு.

எனவே, மாநிலம் முழுவதும் தங்களுக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழுக்கள் சார்பில் உடனடியாக புகார் அளிக்கவும், காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்ய வலியுறுத்தவும் சங்கத்தின் மாநில தலைமை முடிவு செய்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details