தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்: அமைதியாக நடந்துமுடிந்த வாக்குப்பதிவு - Banner against AIADMK, DMK

மதுரை: மேலூர் கிராமத்தில் அதிமுக, திமுக, பாஜக மற்றும் விசிகவை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிப்போம் எனவும் இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை ஆதரிப்போம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேனர் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்
மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்

By

Published : Dec 27, 2019, 10:55 PM IST

மதுரை: மேலூர் கிராமத்தில் அதிமுக, திமுக, பாஜக,விசிகவை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிப்போம் எனவும் இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை ஆதரிப்போம் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேனர் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் 1997 ஜூன் 30ஆம் தேதி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் மீதமுள்ள 13 பேரும் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. தொடர்ந்து, இதுதொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் முன்னிலையாக வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

மதுரையில் சர்ச்சைக்குரிய வகையில் பேனர்

இதனிடையே மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த மேலவளவு பகுதியில் அதிமுக, திமுக, பாஜக, விசிக கட்சிகளுக்கு வாக்கு இல்லை என்றும், பட்டியலின மக்களுக்கு ஆதரவாக உள்ள இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்குத்தான் தங்கள் வாக்கு என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேனர் வைத்துள்ளனர். மேலவளவு கிராமத்தில் உள்ள ஐந்து வாக்குச்சாவடிகளும் பதற்றமான வாக்குச்சாவடிகளாக இருந்தும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்த வெங்கடதார அள்ளி மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details