தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - மதுரை செய்திகள்

மதுரை: மாநகர காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Feb 24, 2021, 10:02 PM IST

மதுரையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைவரிடமிருந்தும் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அந்த வகையில் மதுரையில் 100 வார்டுகளில் அந்த வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதி கோரி உதவி காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தோம். அனுமதி வழங்க இயலாது என மனுவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தற்போதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேல்முறையீட்டு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மதுரை மாநகர காவல் ஆணையர், திலகர்திடல் உதவி காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காவல் துறை நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு!

ABOUT THE AUTHOR

...view details