மதுரை பெரியார் பேருந்து நிலையம் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு (ஏப்ரல் 8) மினிவேனில் வந்த இருவர் கட்டுமானப் பொருட்களை திருட முயன்றனர்.
மதுரையில் கட்டுமானப் பொருட்கள் திருட முயன்ற இருவர் கைது! - Police
மதுரை: பெரியார் பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணியில் கட்டுமானப் பொருட்களை திருட முயன்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
madurai construction material theft
அப்போது அங்கு பணியில் இருந்தவர்கள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து திட்ட மேலாளர் அளித்த புகாரின்பேரில், திடீர் நகர் காவல் துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து பல ஆயிரம் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்பு அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரை காமராஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் சோனைமுத்து, ஆனந்த் எனவும் தெரியவந்தது.