மதுரை மேலூர் குருவார்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மேலூர், கொட்டாம்பட்டி அருகே உள்ள பொட்டப்பட்டி ஊராட்சி தீர்மானத்தின் அடிப்படையில், அருகில் உள்ள கிராமங்களின் விவசாயிகள் நலன் கருதி குருவார்பட்டியில் அரசு கால்நடை மருந்தகம் அமைக்க உத்தரவிட வேண்டும்" என்றஉ குறிப்பிடப்பட்டிருந்தது.
குருவார்பட்டியில் அரசு கால்நடை மருந்தகம் அமைக்க பரிசீலனை செய்க உத்தரவு - Madras High Court
மதுரை மாவட்டத்தில் உள்ள குருவார்பட்டியில் அரசு கால்நடை மருந்தகம் அமைக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
குருவார்பட்டி கிராமத்தில் அரசு கால்நடை மருந்தகம் அமைக்க பரிசீலனை செய்க - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரரின் கோரிக்கை சட்டப்படியான தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விரைவாக பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:மருத்துவ படிப்பை முடித்த மாணவர்களின் சான்றிதழை வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு