தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கெடுத்த மதுரை மாணவியருக்கு பாராட்டு - madurai district news

டெல்லியில் நடைபெற்ற 73ஆவது குடியரசு தின விழாவில், மதுரையில் இருந்து பங்கேற்ற மூன்று தேசிய மாணவர் படை மாணவியருக்கு நேற்று (பிப்.4) பாராட்டு விழா நடைபெற்றது.

டெல்லி சென்ற மதுரை மாணவியர்களுக்கு பாராட்டு
டெல்லி சென்ற மதுரை மாணவியர்களுக்கு பாராட்டு

By

Published : Feb 5, 2022, 7:44 AM IST

மதுரை :டெல்லியில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி நாட்டின் 73ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்க தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தேசிய மாணவர் படை சார்பாக நடைபெற்ற அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து 12 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

அவர்களில் 6 பேர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் மூவர் மதுரையைச் சேர்ந்த மாணவிகள். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியை சேர்ந்த மதுமிதா, மீனாட்சி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த நாகஸ்ரீ கிரண், அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த தேவதர்ஷினி ஆகியோர் ஆவர்.

பாராட்டு விழா

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியை சேர்ந்த ஜீவபாரதி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெரின், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா தர்ஷினி ஆகியோர் தென் மாவட்டங்களிலிருந்து குடியரசு தின விழாவில் பங்கேற்ற மாணவியர் ஆவர்.

காவல் ஆய்வாளர்கள் சரவணக்குமார், பொன் மீனா, தலைமைக் காவலர் ராமச்சந்திரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர். இரண்டாம் பெண்கள் அணியின் தலைமை அலுவலர் கர்னல் ரமேஷ் மற்றும் என்சிசி அலுவலர்கள் சுகுணேஸ்வரி, முத்துச்செல்வி சாந்த மீனா, சாரா ஆகியோர் மாணவ மாணவியரை கௌரவித்தனர்.

தேசிய மாணவர் படை

இதையும் படிங்க : அரியர் மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் செமஸ்டர் தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details