மதுரை விரகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பள்ளி மாணவர்கள் போதை பொருள்களை பயன்படுத்திவருவதாக தலைமை ஆசிரியர் ஒருவர் மாவட்ட அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
மதுரை: விரகனூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மாவட்ட அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்
இதனையடுத்து வட்டார சுகாதார அலுவலர்கள் விரகனூரில் உள்ள டீக்கடை, பலசரக்குக் கடை ஆகியவற்றில் இன்று காலை சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களிடமிருந்து அபராதத் தொகையாக 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காரில் கடத்திய புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது!
Last Updated : Sep 28, 2019, 12:35 AM IST