கரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தொற்று தீவிரமாகப் பரவும் வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஜூன் 24ஆம் தேதி அதிகாலையிலிருந்து மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு மற்றும் மதுரை மேற்கு ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் நாளை ஒருநாள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.மேல்குறிப்பிட்ட பகுதிகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை பேருந்துகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயங்கவும், கடைகள், வணிக நிறுவனங்கள் முழுவதுமாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்கவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'கரோனா குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்