தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலவச வீட்டுமனை: மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் புகார் - Complaints District Collector

மதுரை: தங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனையை வழங்காமல் அலுவலர்கள் அலைக்கழித்ததாக மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

handicapped Complaints

By

Published : Nov 19, 2019, 2:51 PM IST

மதுரை ரெயின்போ மாற்றுத்திறனாளி நலச்சங்கம் சார்பாக மதுரையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், "மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசால் வீட்டுமனைப் பட்டா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் 60 மாற்றுத்திறனாளிகள் தென் பகுதியில் குடிசை வீடு, ஓட்டு வீடு கட்டி வசித்துவருகிறோம். இப்பகுதியில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் மத்திய அரசின் நகரமாக்கும் திட்டத்தின் கீழ் புதிய வீடு அமைக்க முடியாமல் சிரமப்படுகிறோம். எனவேதண்ணீர் வசதி உடனடியாக செய்து தர வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் புதிதாக 65 மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தோம். இருப்பினும் துணை ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தை முறையாக பரிசீலனை செய்யாமல் தொடர்ந்து அலைக்கழித்ததோடு மட்டுமல்லாமல் அவதூறாகவும் பேசுகிறார்கள். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தல்: வார்டு பிரிவு இடஒதுக்கீட்டில் குளறுபடி

ABOUT THE AUTHOR

...view details