மதுரை பாண்டி கோயில் பகுதியிலிருந்து விமான நிலையம் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே பிரபல மருத்துவமனை ஒன்று செயல்பட்டுவருகிறது. அம்மருத்துவமனையின் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் மருத்துவக் கழிவுகளை மொத்தமாக வைத்து தரம் பிரித்துவரும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு மருத்துவமனை கழிவுகளை ஊழியர்கள் தீயிட்டு எரித்ததால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.