நித்யானந்தா கூறி வரும் கைலாசா நாட்டில் உணவகம் வைக்க அனுமதி கோரி மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் அதிபர் குமார் என்பவர் சமூகவலைதளத்தில் நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைப் பார்த்த நித்யானந்தா, நேரலையில் உணவகம் முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மதுரை ஆட்சியரிடம் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியதாவது, "மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள டெம்பிள் சிட்டி உணவகம் அப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.