தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மன வளர்ச்சி குன்றிய 17 வயது மகளுடன் வசித்துவருகிறேன். நான் கூலி வேலைக்காகச் சென்ற நேரம் பார்த்து பக்கத்து வீட்டிலிருந்த 55 வயதுடைய ஒருவர் எனது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததில் மகள் கர்ப்பமடைந்துள்ளார். ஆகவே எனது மகளின் கருவைக் கலைக்க அனுமதி வழங்கியும், உரிய இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவிகள் மையம் மூலமாக 1 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.