மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது.
ஆனால், தற்போது மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையை, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், 12 ஆயிரம் பேர் வசிக்கும் பைகாரா பகுதிக்கு மாற்றப்பட்டது. அதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.