தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம்! - College fee hike

மதுரை : கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

By

Published : Mar 5, 2021, 7:17 AM IST

நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில், 7,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது, செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், கல்லூரி நிர்வாகம் கல்வி கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்பின்றி பல மடங்கு உயர்த்தியதாகக் கூறப்படுகிறது.

செமஸ்டர் தேர்வுக் கட்டணம், கல்லூரி பராமரிப்பு கட்டணம் என கூறி பல மடங்கு கல்வி கட்டணத்தை உயர்த்தியும், கட்டணத்திற்குரிய உரிய ரசீது தராமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடிப்பதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கல்லூரி மாணவர்கள் தரப்பில் கட்டண உயர்வை திரும்பப்பெற கோரி கோரிக்கை விடுக்கப்பட்ட சூழலில், அதற்கு கல்லூரி நிர்வாகம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கல்விக் கட்டணங்களை உயர்த்திய கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நேற்று (மார்ச்4) கல்லூரி வாசலின் முன் அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும், செமஸ்டர் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற முழக்கங்களை எழுப்பி அரசுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதையும் படிங்க :விருதுநகரில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details