தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவர் உயிரிழப்பு! கதறி அழுத நண்பர்கள்.. - மதுரை மாவட்டம்

மதுரையில் அரசு சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பொறியியல் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட பொறியியல் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்! கதரி அழுத நண்பர்கள்..
மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட பொறியியல் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்! கதரி அழுத நண்பர்கள்..

By

Published : Jul 23, 2023, 10:53 PM IST

Updated : Jul 24, 2023, 6:05 AM IST

மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட பொறியியல் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்! கதறி அழுத நண்பர்கள்..

மதுரை:அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உதிரம் 2023 என்ற தலைப்பில் குருதி கொடை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கி 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.

இந்த மாரத்தான் போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற மாணவர் பங்கேற்றார். இவர் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர் போட்டியில் பங்கேற்று முடித்த பின்னர் மேடையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவர் தினேஷின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு உடற் கூறாய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப‌பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் அளித்த விளக்கத்தில், “மாணவர் தினேஷ் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு போட்டி முடிவடைந்த பின் அவரது நண்பர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டுதான் இருந்துள்ளார்.

கழிவறைக்கு சென்றபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சக நண்பர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், அவருக்கு ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் இல்லாமல் இருந்தது. அவருக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்தார்”, என தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கல்லூரி மாணவர் தினேஷுடன் மாராத்தான் போட்டியில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள் தினேஷின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கரோனா தொற்று பரவலுக்கு பின்னர் இளைஞர்களிடையே மாரடைப்பால் ஏற்ப்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மக்களவை மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.30 லஞ்சம் கேட்டு வாகன ஓட்டுனர் தாக்குதல்! வனத்துறை ஊழியர் வீடியோ வைரல்!

Last Updated : Jul 24, 2023, 6:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details