தமிழ்நாடு முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 77 பேர் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் சிறப்பு குழு ஈடுபட்டு வருகிறது. தற்போது வரை சுமார் 6 ஆயிரத்து 8 பேரிடம் இருந்து 2 கோடியே 15 லட்சம் ரூபாய் திரும்பப் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தகுதியற்றவர்கள் கண்டறியப்பட்டு அவரிடம் இருந்து காவல் துறை உதவியுடன் பணத்தை மீட்க மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினய் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்துபோலீஸ் பாதுகாப்புடன் பணத்தை மீட்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.