மதுரை:(Southern Railway)பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக ஜனவரி 13 முதல் ஜனவரி 18 வரை திண்டுக்கல் - கோயம்புத்தூர் இடையே ஒரு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர் - திண்டுக்கல் முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில் (06077) கோயம்புத்தூரில் இருந்து காலை 09.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06078) திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.