தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு நூற்பாலை பணியிடம் குறித்த வழக்கு - கூட்டுறவுத் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: கூட்டுறவு நூற்பாலைகளில் மின்னணு பொறியாளர் பணியிடம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

post
post

By

Published : Jun 11, 2020, 3:54 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முனியசாமி. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் மின்னணு பொறியியல் துறையில் பட்டயப் படிப்பை முடித்துள்ளேன். கடந்த மார்ச் 12,,13 ஆகிய தேதிகளில் தேனி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், கூட்டுறவு நூற்பாலைகளில் மின்னணு பொறியாளர் பணியிடம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டதற்கு, பட்டம் பெற்றவர்களை நவீன முறைகளை கையாளும் திறன் பெற்றிருப்பார்கள் என்பதுபோல விளக்கமளிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே தேனி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலைகளில் மின்னணு பொறியாளர் பணியிடம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்துசெய்து, மின்னணு பொறியியல் துறையில் பட்டயப் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இது தொடர்பாக கைத்தறி துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:காசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details