மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில், ”எட்டு வழிச் சாலை திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்க்கும் நிலையில், முதலமைச்சர் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் மட்டும்தான் ஆணவப் படுகொலை நடைபெறுகிறது என்று யாரும் குற்றம்சாட்டவில்லை. அதேபோன்று தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெறுகிறது என்றும் கூறவில்லை. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற கொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு முதலமைச்சர் ஆர்வம் காட்டக்கூடாது: திருமாவளவன் - thirumavalavan
மதுரை: எட்டு வழிச் சாலை திட்டத்தை ஒட்டு மொத்த தமிழ்நாடே எதிர்க்கும் நிலையில், முதலமைச்சர் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இச்சூழ்நிலையில் இதை தடுப்பதற்குரிய முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது என்பதை முதலமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும். முதலமைச்சர் மத்திய அரசுடன் இணைந்து ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு சுதந்திரமாக செயல்படவில்லை என்பதும் மத்திய அரசின் கெடுபிடியின் கீழ்தான் இயங்கி வருகிறது என்பதை உணர்த்தும் வகையில்தான் மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. அனைத்திற்கும் வளைந்து நெளிந்து செயல்படுகின்ற சூழலுக்குள் தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது” என்றார்.