தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறை நிறுத்தப்படவில்லை' - முதலமைச்சர் விளக்கம் - மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர்

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்ட 15 நாள்கள் விடுமுறையை நிறுத்தி வைக்கவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்தார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Mar 14, 2020, 9:49 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்ட 15 நாள்கள் விடுமுறை நிறுத்தி வைக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இல்லை. ரஜினி கட்சியே ஆரம்பிக்கவில்லை.

அதுபற்றி கற்பனையான கருத்து கூற இயலாது. கமலின் சக்தியை கடந்த தேர்தலில் பார்த்துவிட்டோம். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பித்து, மக்களைச் சந்தித்துப் பேசலாம். தேர்தலுக்குப் பிறகு அமமுக இருக்குமா என்பதைப் பார்ப்போம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:நாகர்கோவில் டூ நாசா: கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details