மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சுவாமி தரிசனம்செய்ய வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது போன்று இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டிலும் நிறைவேற்ற முதலமைச்சர் பழனிசாமி பரிசீலிக்க வேண்டும்.
'மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும்' - நாராயணசாமி - undefined
மதுரை: உலக மகளிர் தின பரிசாகப் பிரதமர் நரேந்திர மோடி மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும் என மதுரையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது ட்விட்டர் பக்கத்தை பெண்கள் இன்று ஒரு நாள் மட்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு பயன்படுத்தலாம் என்று கொடுத்த அனுமதிக்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டு மகளிர் தொடர்ந்து கோரிக்கை வைத்துவரும் சூழலில், அவர்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மகளிர் தின பரிசாக கொடுத்தால் நன்றாக இருக்கும்.
துணைநிலை ஆளுநருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும்” என்றார்.
TAGGED:
cm narayanasamy press meet