மதுரை மாவட்டம் அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிக்காக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் வாக்குச் சாவடி பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது.
'ஜெயலலிதா திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள்' - முதல்வர் உத்தரவு - அதிமுக
மதுரை: ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி, இடைத்தேர்தல்களில் வெற்றபெற செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி, அதிமுகவின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
வலைத்தள திண்ணை பரப்புரை முன்னெடுப்புகள், சமூக வலைதளங்களுக்கான ஒருங்கிணைந்த யுக்திகள், தகவல் தொழில்நுட்ப பரப்புரை வழிமுறைகள் என மூன்று தலைப்புகளில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், "தமிழகத்தில் 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தல், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும், தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்" என பேசினார்.