தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைதிகளின் கைவண்ணத்தில் சூப்பர் ஆடைகள்; மதுரை மக்கள் வரவேற்பு! - madurai jail prisoners made shirts

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் உருவாக்கிய ரெடிமேட் ஆடைகளுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கைதிகளின் கைவண்ணத்தில் சூப்பர் ஆடைகள்! - பொதுமக்களிடம் வரவேற்பு
Etv Bharatகைதிகளின் கைவண்ணத்தில் சூப்பர் ஆடைகள்! - பொதுமக்களிடம் வரவேற்பு

By

Published : Jan 13, 2023, 10:52 AM IST

Updated : Jan 13, 2023, 12:58 PM IST

கைதிகளின் கைவண்ணத்தில் சூப்பர் ஆடைகள்; மதுரை மக்கள் வரவேற்பு!

மதுரை: மத்தியச் சிறைச் சாலையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் தோட்டவேலை, சமையல் வேலை, பூந்தொட்டிகள் தயாரித்தல், உணவுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பணிகளில் சிறை கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கைதிகளில் ஒரு பிரிவினர் தையல் கலைஞர்களாக உருவெடுத்துள்ளனர் அவர்களுக்காகச் சிறை வளாகத்தில் 13 தையல் இயந்திரங்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு தற்போது பொங்கல் திருநாள் என்பதால் ரெடிமேட் சட்டைகள் தயாரித்து சிறை அங்காடி மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிறை கைதிகளால் தயார் செய்யப்படும் சட்டைகள் ரூ.300லிருந்து ரூ.550 வரையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதையும் படிங்க:மதுரையில் இனி விமான சேவை 24 மணி நேரமும் இயங்கும்: எப்போதிருந்து தெரியுமா?

Last Updated : Jan 13, 2023, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details